
சிக்கன் கிரேவி செய்முறை :
சிக்கன் - ஒரு கிலோ, வெங்காயம் - இரண்டு, தக்காளி - இரண்டு, இஞ்சி - ஒரு இன்ச் அளவு, பூண்டு - பத்து பல், பச்சை மிளகாய் - மூன்று, பட்டை, லவங்கம், மிளகு, சோம்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், சிக்கன் பவுடர் அல்லது தனியா தூள், எண்ணெய் மற்றும் உப்பு. இஞ்சி, பூண்டை அரைத்து வைத்து கொள்ளவும்.
முதலில் சிக்கனை தேவையான அளவுகளில் வெட்டி நீரில் கழுவிய பின் மஞ்சள் தூள், சிக்கன் பவுடர் அல்லது தனியா தூள் இட்டு கலந்து, பிரீசரில் முப்பது நிமிடம் வைக்கவும். அடுப்பில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு, மிளகு போடவும், லவங்கம் வெடித்தவுடன், இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கவும், ஒருநிமிடம் கழித்து வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், பிறகு, தக்காளியை போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியவுடன் உப்பு,
சிக்கனை சேர்த்து கிளறி விடவும், தீயை சிறிய அளவு வைத்து மூடி விடவும்.
பத்து நிமிடம் கழித்து உப்பு பதம் பார்த்து சேர்க்கவும். இரண்டு முறை கிளறி விடவும். பின்னர் கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
கிரேவியாக வேண்டும் எனில் நீர் அதிகம் சேர்க்கவும், அல்லது தேங்காய் பால் சேர்க்கலாம்.
சுவையான சிக்கன் ரெடி. சாப்பிட நீங்கள் ரெடியா?